Friday, 24 February 2017

சீனாவில் சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
சீனாவில் சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நான்சாங் நகரத்தில் ஆடம்பர சொகுசு ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த சொகுசு ஓட்டலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தில் 3 பேர் பலியாகியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 14 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர். இன்னும் பலர் ஓட்டலுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அடுக்குமாடி ஓட்டலில் பல தளங்களில் தீ பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தீ அணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஓட்டலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன.  எச்.என்.ஏ என்ற அந்த ஓட்டல் 4 தளங்களை கொண்டதாகும். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மோகித் கோயல் எட்டாம் வகுப்பு வரை மட்டு
மே படித்துள்ளார்: போலீஸ் தகவல்
ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மோகித் கோயல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்: போலீஸ் தகவல்
ரிங்கிங் பெல்ஸ்’ என்ற நிறுவனம் ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251–க்கு செல்போன் வழங்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து சுமார் 7 கோடி பேர் இந்த மொபைலுக்காக ஆன்–லைனில் பதிவு செய்தனர். இந்த அறிவிப்பு பல முன்னணி செல்போன் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதில் சதி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் மொகித் கோயல் மீது காசியாபாத்தைச் சேர்ந்த அயம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காசியாபாத் போலீசில் புகார் செய்தார். அதில், கடந்த 2015–ம் ஆண்டு ‘பிரீடம் 251’ செல்போனை வினியோகிப்பதற்காக ரூ.30 லட்சத்தை அந்த நிறுவனத்துக்கு அளித்தேன். ஆனால் அவர்கள் ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே எங்களுக்கு அளித்தனர். மீதி பணத்தை திருப்பி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். என்னிடம் ரூ.16 லட்சத்தை மொகித் கோயல் மோசடி செய்துவிட்டார் என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மொகித் கோயலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மோகித் கோயலிடம் விசாரணை நடத்திய போது, அவர் 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதும் அதிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். லிங்கெடன் இணையதளத்தில் அமிதி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளதாக கோயல் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால்,  விசாரணையின் போது, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் தனது ஆங்கிலப்புலமையை மேம்படுத்த தனியாக பயிற்சி வகுப்புகள் சென்றதாகவும்  மோகித் கோயல் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அமிதி பல்கலகைக்கழகம், மோகித் கோயல் தனது பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், அவர் எந்த பட்டபடிப்பை மெற்கொண்டார் அல்லது தொலைதூரக்கல்வியில் பயின்றாரா? என்பது குறித்த இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

Wednesday, 22 February 2017

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வருகை
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தையும், அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார். இதற்காக, அவரை கட்சியில் உடனடியாக இணைத்தவர், அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார்.

கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்து, தினகரன், சசிகலாவின் விருப்பப்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வைத்தார்.

பதவி ஏற்பு:


இதற்கிடையில், பெங்களூரு சென்று, சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய தினகரன், இன்று (பிப்.,23) காலை, அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலராக பதவி ஏற்றுக் கொள்கிறார். பகல் 12:00 மணிக்கு நடக்கும் இந்த பதவி ஏற்பு விழாவில், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் மாநில நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவருக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லப்பட்டது.

இது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கட்சியின் பொதுச் செயலராக தேர்வு பெறுகிறவர் மட்டும்தான், இப்படியெல்லாம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தி, பதவியை பெறுவது வாடிக்கை. கட்சியின் மற்ற எந்தப் பொறுப்புக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. வெறும் அறிவிப்பு மட்டும்தான் இருக்கும். ஆனால், தினகரனுக்கு மட்டும், புதிதாக இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலர் சிறையில் இருக்கும் நிலையில், அவர் பொறுப்பை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் தினகரனுக்கு, கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட எண் 5:

தினகரனின் அதிர்ஷ்ட எண் 5. அதனால, ஐந்து கூட்டு எண்ணிக்கை வரும் நாளான 23ல் அவர் பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு இப்பதவி அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும், சசிகலா, சிறையில் இருந்து விடுபட, நான்கு ஆண்டுகள் ஆகும் என்பதால், நான்கு ஆண்டுகள் வரையில், தினகரனுக்கு சிக்கல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மின்சார ரெயிலில் படியில் தொங்கிய 7 பேர் மின்கம்பம் மோதியதால் விழுந்து 3 பேர் பலி

செங்கல் பட்டில் இருந்து விரைவு மின்சார ரெயில் ஒன்று இன்று காலை கடற்கரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. சென்னை பரங்கிமலை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தது.மின்சார ரெயிலின் படியில் தொங்கியபடி பல இளைஞர்கள் பயணம் செய்தனர். அப்போது  ஒருவர் பை மின்கம்பத்தில் பட்டு படியில் தொங்கிக் கொண்டு இருந்த 7 பேர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தனர்  இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் 2 பேர் பெயர் தெரியவந்து உள்ளது ஒருவர் மதுசூதனன்,மற்றொருவர் கோபி

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.உயிர் இழந்தவர்களில் ஒருவர் பெருங்காலத்தூரை சேர்ந்த பிரவீன் ஆவார்.

Tuesday, 21 February 2017

சாகாவரம் பெற்ற புற்றுநோய் செல்கள்

டாக்டர் பீடெர் சுல்ட்ஜ் அவர்கள் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தியுள்ள ஆன்டியாக்சிடண்ட் ஆராய்ச்சிதான் அது. டாக்டர் பீடெர் சுல்ட்ஜ் தன் குழுவினருடன், ஆற்றல்மிக்க மூலிகை ஆன்டியாக்சிடண்ட் கூட்டுப் பொருளான ‘ஜங்கோ பிலோபா’ வடிப்பின் (Ginkgo Biloba Extract) திறனை ஆய்வுக்கூட சுண்டெலிகளைக் (Laboratory Mice) கொண்டு ஆராய்ந்துள்ளனர். சுண்டெலிகளை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவுக்கு ‘ஜிங்கோ பிலோபா வடிப்பும்’ மறு குழுவுக்கு வெறும் உணவு மட்டும் கொடுக்கப்பட்டது.

ஆய்வு முடிவில் இருவகை சுண்டெலிகள் மூளை செல்களில் ‘ஜிங்கோ பிலோபா’-வின் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.நினைவாற்றலை மேம்படுத்துவதற்காக பொதுவாக எல்லாராலும் ஜிங்கோ பிலோபா பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சில ஆராய்ச்சிகளில் அல்சீமர்ஸ்  நோய் வளர்ச்சி வேகத்தை ஜிங்கோ பிலோபா குறைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் பீடெர் சுலட்ஜ் நடத்தியுள்ள இந்த ஆராய்ச்சிகளில் ஜிங்கோ பிலோபா மூளை  செல்களின் பலவகை மரபணுக்களின் செயல்பாடுகளை உயர்த்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுண்டெலிகளுக்கு ஜிங்கோபிலோபா கொடுத்த பிறகு மூளை செல்களின் 10-மரபணுக்கள் செயல்திறன் 16-மடங்கு உயர்ந்துள்ளது. 10-மரபணுக்களில் ஒன்று மூளையின் ஹிப்போகாம்பஸ் செயல்பாடுகள் பாராட்டும்படி உயர்ந்திருந்தன. ‘ஹிப்போகாம்பஸ்’ புதியவை கற்பதற்கும் நினைவாற்றலுக்கும் உரிய மூளை உறுப்பு.

மற்ற 9-மரபணுக்களும், பெருமூளை மேற்பரப்பு புறணியின் (Cerebral Cartex) உயிர் வேதியல் Biochemical செயல்பாடுகளை குறிப்பிடும் வகையில் உயர்த்தியிருந்தன. பெருமூைள புறணி ஒருவருடைய நினைவாற்றல், பேச்சுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடு, உடல் இயக்க அசைவுகள் போன்றவை உருவாகும், ஒழுங்குப்படுத்தும் முக்கியப்பகுதி.

ஜிங்கோ பிலோபா உட்கொண்டதால், மேலே குறிப்பிட்டுள்ள மரபியல் செயல்பாடுகள் மேம்பாடு, அறிவாற்றல் செயல்பாடுகள் (Cognition) மற்றும் நினைவாற்றல் இரண்டும் ேமம்பட்டுள்ளன.

உயிரியல் சுழற்சி செய்முறைகளால், உடல் செல்கள் வளர்ச்சி, DNA இரட்டிப்பு (Replication), புதிய செல்கள் உருவாக்கம் ஆகியவை இயல்பாக ஒழுங்கு படுத்தப்படுகின்றன. இதைப் போலவே ஆன்டியக்சிடண்டுகள் செல் சுழற்சி இயல்பாக நடைபெறுவதை ஆன்டியாக்சிடண்டுகள் ஒழுங்குபடுத்துகின்றன.

புற்றுச் செல்களின் மரபணுக்களும் ஆன்டியாக்சிடண்ட்களும் உடலில் உள்ள ஏறத்தாழ எல்லா செல்களிலும், ‘அபோப்டோசிஸ்’ எனும் ‘செல் தற்கொலைத் திட்டம்’ அமைந்துள்ளது. செல்கள் குறிப்பிட்ட காலம் வளர்ந்து முதிர்ச்சி அடைந்ததும், தற்கொலைத் திட்டத்தின்படி, உயிரியல் சுழற்சி நிறுத்தப்பட்டு ‘செல் இறப்பு’ தூண்டப்படுகிறது.

இது இயற்கை செல் இறப்பு செய்முறை. நோய் எதிர்ப்பு இயக்கம் செயல்பட்டு இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. முதிர்ந்த செல்களில் மரபியல் குறிப்புகள் சிதைந்து விடுவதால், அவை அகற்றப்படாவிட்டால், புற்றுச் செல்லாக மாற்றமடையக் கூடும். அதனால், இந்த ‘செல் தற்கொலைத் திட்டம்’ புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.

புற்றுச்செல்களில் ‘தற்கொலைத் திட்டம்’ இல்லை. புற்றுச்செல்கள் ‘சாகாவரம்’ பெற்றவை. இப்போது ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ‘புற்றுச் செல்கள்’ எப்போதோ, புற்றுநோய் அறுவை மருத்துவத்தின் போது  பெறப்பட்ட முன்னாள் புற்றுச்செல்களின் வழித்தோன்றல் செல்கள்தான். புற்றுச் செல்களில் அமைந்துள்ள மரபியல் திட்டம் அவைகளுக்கு ‘சாகாமை’ அளித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள், புற்றுச்செல்களை அழியாமல் பாதுகாக்கும் ‘செல் சுழற்சி’யில் ஆன்டியாக்சிடண்டுகள் குறுக்கிட்டுத் தடுப்பதாகவும், புற்றுச்செல்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் (apoptosis) கண்டு பிடித்துள்ளனர். புற்றுச் செல் ஆராய்ச்சிகளில் E-உயிர்ச்சத்து, பீட்டா-கெரோட்டின், மூலிகை வடிப்பான ‘சிலிமாரின்’ பயன்படுத்தப்படுகின்றன.

இவை மூன்றும்ஆன்டியாக்சிடண்ட் ஊட்டச்சத்துக்கள்.டென்வெர் ‘AMC’ புற்று ஆராய்ச்சி நிலையத்தில் மார்புப்புற்றுச் செல்கள் ஆராய்ச்சிகளில் ‘சிலிமாரின்’ பயன்படுத்தப்பட்டது.புதிய புற்றுச்செல் உருவாக்கும் செய்முறையில் டிஎன்ஏ படியெடுப்புக்கு சற்றுமுன் சிலிமாரின் படியெடுப்பைத் தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஆன்டியாக்சிடண்டுகள் புற்றுச்செல் வளர்ச்சியைத் தடுப்பது தெளிவாகிறது. ஆன்டியாக்சிடண்டுகள் நல்ல செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில்லை.

ஃபிரிரேடிகல் சிதைவுகளும் - டிஎன்ஏ பாதுகாப்பும்டிஎன்ஏ மரபணுக்கள், குரோமோசோம்கள் ஆகிய மரபியல் கூறுகளை ஃபிரிரேடிகல்கள் தாக்கிச் சிதைக்கின்றன. இத்தகைய தாக்குதல்களைத் தடுத்து இவற்றை ஆன்டியாக்சிடண்டுகள் பாதுகாக்கின்றன. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அவற்றில் மூன்று ஆராய்ச்சிகளைப் பார்ப்போம்.
கோவில் திருவிழாவில் 65 அடி தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்
வீடியோ: கோவில் திருவிழாவில் 65 அடி தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே 65 தேர் கவிழ்ந்தது. இந்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தேர் கவிழும் நிகழ்வை சம்பவயிடத்திலிருந்த நபர் ஒருவர் தனது போனில் பதிவு செய்துள்ளார். தற்போது, குறித்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. 

ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் : பூர்வா ஜோஷிபுரா பேட்டி

சிங்கப்பூரில் தோன்றிய அரிய தீ வானவில்
சிங்கப்பூரில் தோன்றிய அரிய தீ வானவில்

சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதன் பேஸ்புக் பதிவில் தீ வானவில்  குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. ஒளி-விலகல் எனப்படும் அரிய விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைப்பு குறிப்பிட்டது
 
இது குறித்து நாசா கூறும் போது  தீ வானவில்லானது  சூரியன் வானத்தில் 58 டிகிரி கோணத்தில் மேகங்களுடன் ஊடுருவும் போது  இந்து உருவாகின்றன  எனகூறி உள்ளது

Sunday, 19 February 2017

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால் 1 சதவீதம் வரி ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால் 1 சதவீதம் வரி ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1–ந் தேதி இது அமலுக்கு வருகிறது.
தற்போதைய வரி விதிப்பு
தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க கட்டிகள், பிஸ்கெட்டுகள் வாங்கினாலும், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்கினாலும் அதற்கு 1 சதவீதம் ரொக்க வரி (டி.சி.எஸ்.) விதிக்கப்பட்டு வருகிறது.
இது 2012–ம் ஆண்டு, ஜூலை 1–ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
ஆனால் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலே, 1 சதவீதம் ரொக்க வரி (டி.சி.எஸ்.) விதிக்க மத்திய அரசு முடிவு செய்து 2016–17 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் சிறுகச்சிறுக பணம் சேர்த்து சுமார் 9 அல்லது 10 சவரன் நகை வாங்குகிறவர்களும் 1 சதவீதம் வரி செலுத்துகிற நிலை உருவானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1–ந் தேதி அது வாபஸ் பெறப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பு
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, ரொக்க பணமில்லா பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பண பரிமாற்றத்துக்கு தடையும் விதித்துள்ளது.
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் கொடுத்து எந்தவொரு பொருளையோ, சேவையையோ வாங்கினால் 1 சதவீத ரொக்க வரி விதிக்கும் வகையில் 2017–18 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 1–ந் தேதி அமல்
அதாவது, பொருள் என்கிற பிரிவிலேயே நகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை மத்திய அரசு அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து பொருட்கள், சேவைகள் வாங்கினால் அதற்கு 1 சதவீத ரொக்க வரி செலுத்த வருமான வரிச்சட்டம் வகை செய்கிறது. இப்போது பொருட்கள் என்ற பிரிவில் நகைகளும் சேர்க்கப்படுகிறது. எனவே ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து தங்க நகை வாங்கினாலும் 1 சதவீதம் ரொக்க வரி செலுத்த வேண்டும்’’ என கூறினார்.
பட்ஜெட் (நிதி மசோதா) நிறைவேறிவிட்டால், இது ஏப்ரல் 1–ந் தேதி அமலுக்கு வந்து விடும்.
தற்போதைய நிலவரப்படி பார்த்தால் ஒருவர் ரொக்கப்பணம் கொடுத்து 9 சவரன் தங்க நகை வாங்கினாலே அதற்கு 1 சதவீதம் ரொக்க வரி (சுமார் ரூ.2 ஆயிரம்) செலுத்த வேண்டியது வரும். அந்த வரியை நகைக் கடைக்காரர்கள், பொதுமக்களிடம் வசூலித்து அரசுக்கு செலுத்துவார்கள்.
இது சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை என்று இல்லத்தரசிகள் கூறுகிறார்கள்.

Friday, 17 February 2017

பழனி கோயிலில் மாறு வேஷம்.... அது விஜய்யே இல்லையாம்!

விஜய் சமீபத்தில் பழனி கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்று தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளிவந்தது. அந்தப் புகைப்படத்தில் முகத்தை காவித் துண்டால் மறைத்தபடி, கண்ணாடி அணிந்து விஜய்யைப் போலவே ஒருவர் காவி வேஷ்டியுடன் நடந்து வருவார். இதைப் பார்த்ததும் விஜய்தான் பழனி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக செய்தி பரவியது.

இப்போது அந்த புகைப்படத்தில் இருந்தது விஜய் இல்லை, வேறொருவர் என்பது தெரியவந்துள்ளது. அதற்கான படம் ஒன்றும் சமூக வலைத் தளத்தில் வெளியாகியுள்ளது. விஜய் சர்வ மதங்களையும் சமமாகப் பாவிப்பவர். இதற்கு முன்பும் கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார். விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க வேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என நேற்று ஓ.பி.எஸ். அணி தரப்பில் புகார் தெரிவிக்கபட்டது. மேலும் இதுகுறித்து மைத்ரேயன் எம்பி தலைமையில் நேற்று எம்பிக்கள் 10 பேர் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மனு அளித்தனர். 

மேலும் மனுவில் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை என்றும் விதிகளுக்கு மாறாக சசிகலா பொதுச்செயலாராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் ஓ.பி.எஸ். அணி தரப்பு மனு அளித்திருந்தது. இந்நிலையில் ஓ.பி.எஸ். தரப்பு புகார் குறித்து பதிலளிக்க பதிலளிக்க வேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி பிப்ரவரி 28ம் தேதிக்குள் சசிகலா பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது: கட்ஜு

திருச்சி, என்.ஐ.டி.,யில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்த கட்ஜு, விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: சிறை தண்டனை பெற்ற சசிகலா, மேல்முறையீடு செய்ய முடியாது. சீராய்வு மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். ஆனால், பெரும்பாலான சீராய்வு மனுக்கள், தள்ளுபடி தான் செய்யப்பட்டுள்ளன. இடைப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து, ஆறு மாதம் கழித்து தான், விமர்சனம் செய்ய முடியும். தமிழக அரசியல் விவகாரத்தில், கவர்னர் வித்யாசாகரின் முடிவுகள் அனைத்தும் சரியானதே.

நம்பிக்கை ஓட்டெடுப்பு: கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர் எம்.எல்.ஏ.,க்கள்

 புதிதாக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,18) நடக்கிறது. காலை 11 மணிக்கு நடக்கும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதற்காக, கடந்த 10 நாட்களாக கூவத்தூர் ‛கோல்டன் பே' ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.,க்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கூவத்தூரில் இருந்து முதலில் அமைச்சர்கள் புறப்பட்டனர். பின்னர் எம்.எல்.ஏ.,க்கள் காரில் புறப்பட்டனர். ஒவ்வொரு காரிலும் 5 எம்.எல்.ஏ.,க்கள் செல்கின்றனர். கார்களில் செல்லும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர்.

Friday, 10 February 2017

கமுதி ஒன்றிய பகுதியில் கழிப்பறை கட்டியதில் பல லட்சம் முறைகேடு

கமுதி பகுதியில் கழிப்பறை தரமற்றதாக கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகளில் 7,280 தனி நபர் கழிப்பறைகள் சுகாதார பாரத இயக்கம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. தற்போது  பசும்பொன், புதுக்கோட்டை, பம்மனேந்தல், வலையபூக்குளம், மேலமுடிமன்னார் கோட்டை, கே.நெடுங்குளம்,  நாராயணபுரம், பாக்குவெட்டி உள்ளிட்ட 53 கிராம ஊராட்சிகளில் தனி நபர் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் சில இடங்களில் தரமற்ற முறையில் கழிப்பறை கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக பல்வேறு இடங்களில் ஆட்களே இல்லாத வெளியூர்களில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களின் வீடுகளை கண்டறிந்து கட்டப்பட்டுள்ளது. இதற்காக அவர்களிடம்  முறையாக  அனுமதி  பெறாமல், வீட்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வீடுகளில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் சொந்த செலவில் கழிபறைகளை கட்டி  பயன்படுத்தி வருகின்றனர். அந்த கழிப்பறையையும் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக புகைப்படம் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில்  ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுக்குளம் பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எங்களின் அனுமதியை பெறாமல் வீடுகளுக்கு முன்பாக கழிப்பறைகள் கட்டி முடித்துள்ளனர். அதனை பெயரளவிற்கு தரமற்றதாக கட்டி முடித்ததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதேபோன்று 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெளியூர்களுக்கு குடிபெயர்ந்துள்ள நபர்களின் வீடுகளை கண்டறிந்து, கழிப்பறைகள் கட்டியுள்ளனர். இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உடன் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன், தரமாக தனிநபர் கட்டிடம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற கட்டிடம் கட்டப்பட்டது குறித்த புகார் ஏதும் வந்தாலோ, அல்லது எங்களது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், கான்டிராக்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அதுபோல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஸ்மார்ட்போனை கிரெடிட்,டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றக்கூடிய வழிகள்!
பெரும் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து டிஜிட்டல் பண பரிவத்தனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும் பனமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பல விளம்பரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பல வியாபாரிகள் பேடிஎம் போன்ற செயலிகள் மற்றும் பாயிண்ட் ஆப் சேல்(பிஓஎஸ்) இயந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டணங்களை பெறுவது அதிகரித்து வருகின்றது. வங்கிகளும் அதற்காக பிஓஎஸ் இயந்திரங்களை அதிகளவில் விற்கத் துவங்கியுள்ளது. ஒரு பக்கம் செயலிகள் பதிவிறக்கும் அதிகர்த்து வரும் நிலையில் உங்களது ஸ்மார்ட்போனை எப்படி கிரெடிட்-டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றலாம் என்று இங்குப் பார்ப்போம்.இபைசா(epaisa)

ஸ்மார்ட்போன் - கார்டு ரீடர் வியாபாரிகள் உங்கள் ஸ்மார்ட்போனை கார்டு ரீடராக மாற்ற மொபைல் செயலியை பதிவிறக்கி அதற்கு ஏற்ற கார்டு ரீடர் ஒன்றை வாங்க வேண்டும். செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிய உடன் கார்டு ரீடரை இணைத்துவிட்டு செயலியில் எவ்வள பணம் என்று உள்ளிட வேண்டும். பின்னர் உங்களது வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டினை கார்டு ரீடரில் ஸ்வைப் செய்தபின் கார்டின் பின் எண்ணை உள்ளிட்டவுடன் பரிவர்த்தனை முடிந்துவிடும். எனவே இங்கு நாம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டு ரீடர் பரிவர்த்தனை சேவைகளை அளிக்கும் செயலிகள் மற்றும் சாதனங்கள் பற்றிப் பார்ப்போம்.
இ-பைசா என்ற செயலியின் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து பணத்தை பெறலாம். இபைசா செயலியுடனான கார்டு ரீடரை இணைக்கக் குறைந்தது மாதம் 199 ரூபாய் முதல் 999 ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டி வரும். அது மட்டும் இல்லாமல் முதன் முதலாகத் துவக்க கட்டணமாக 3,500 ரூபாய் செலுத்த நேரிடலாம். இந்தக் கட்டணம் நீங்கள் தேர்ந்து எடுக்கும் மாத திட்டத்தை பொருத்து குறையும்.
எம்பிஓஎஸ் எம்பிஓஎஸ் சேவையை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த எம்ஸ்வைப் என்ற செயலியை பதிவிறக்க வேண்டும். இந்தச் செயலியின் மூலம் கார்டு ரீடர்களை இணைத்துப் பயன்படுத்த 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை தொடக்க கட்டணமாகவும், மாதம் 30 ரூபாய் சேவை கட்டணமாகவும் வசூலிக்கப்படுகின்றது.
பேபிஓஎஸ் இந்தச் செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்குவதன் மூலம் நேரடியாக வாடிக்கையாளர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று உள்ளிட்ட பிறகு கார்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். உடனே இந்த செயலி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மூன்று நாட்களில் உங்கள் கணக்கில் பணத்தைச் செலுத்திவிடும்
சர்க்கில் இட் அப் மற்றும் பேபால் ஸ்மார்ட்போனை பிஓஎஸ் இயந்திரமாகப் பயன்படுத்தக்கூடிய செயலிகள் மற்றும் கார்டு ரீடர்களை விரைவில் பேபால் நிறுவனங்கள் இந்தியாவில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 9 February 2017

முதல்வர் ஓபிஎஸ் கையை வெட்டுவேன்- அதிமுக மா.செ கலைராஜன் பகிரங்க கொலை மிரட்டல்!Admk district secretary Kalairajan threats to   CM O Panneerselvam gets death threat from ADMK Dist. Secretary


அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கையை வெட்டுவேன் என அக்கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தாம் திரும்பப் பெற விரும்புவதாகவும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் எனவும் ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தினார்.
அதேபோல் சசிகலாவும் தமக்கே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது; ஆகையால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என சசிகலாவும் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து தமிழக சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ஆளுநர் வித்யாசகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன், கட்சியை கைப்பற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முயற்சித்தால் அவரது கையை வெட்டுவேன் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கலைராஜனின் இந்த கொலை மிரட்டல் அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சசிகலா ஆட்சியமைப்பது குறித்து உறுதியாக கூறமுடியாது - பொன்னையன்.

இன்னும் 2 மணி நேரத்தில் முடிவு தெரியும் - பொன்னையன் பேட்டி.

தற்காலிகமாக தப்பினார் சசிகலா.. சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு கிடையாது!

பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. நாளைய உச்சநீதிமன்ற பணிப் பட்டியலில் சொத்துக் குவிப்பு வழக்கு இடம் பெறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவசரி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் தனி நீதிமன்றம் அனைவருக்கும் தலா 4 வருட சிறைத் தண்டனையாயும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
இதை எதிர்த்து பின்னர் கர்நாடக உயர்நீமன்றத்தில் அனைவரும் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்து அதிர வைத்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்களாகியும் தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென சிலநாட்களுக்கு முன்பு கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதிகளை அணுகி தீர்ப்பு என்னாச்சு என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள் இந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தனர். இதனால் சசிகலா தரப்பு பெரும் கலக்கமடைந்தது. தீர்ப்பு பாதகமாக வந்தால் முதல்வர் கனவு மட்டுமல்லாமல் மொத்த வாழ்க்கையும் நாசமாகி விடும் என்பதால் சசிகலா தரப்பு பெரும் துயரத்தில் மூழ்கியது. ஆனால் இன்று வரை தீர்ப்பு வெளியாகவில்லை. நாளைதான் இந்த வாரத்தில் நீதிமன்றத்திற்கு கடைசி பணி நாள். ஆனால் நாளைய பணிப் பட்டியலிலும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இடம் பெறவில்லை. இனி இதை விட்டால் வருகிற திங்கள்கிழமைதான் தீர்ப்பு அளிக்கப்பட முடியும். எனவே இந்த வாரம் சசிகலா தப்பி விட்டார். அனேகமாக திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு சசிகலாவின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதால் சசிகலா தரப்பு பெரும் கலக்கத்தில் உள்ளது.

கூவத்தூரில் கடும் மோதல்... எம்எல்ஏக்களை வெளியேற்ற கிராம மக்கள் கோரிக்கை

Heavy fight between the public and the ADMK people near in resort at koovathoorசென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்றக்கோரி கூவத்தூர் பகுதி மக்கள் அதிமுகவினர் மற்றும் மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்ட அடியாட்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஓபிஎஸ் அணி விகேஎஸ் என பிரிவுகளாக உள்ளது. யார் முதல்வர் பதவியை ஏற்பது என்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது
ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் மன்னார்குடி கும்பல் அச்சமடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவி விடக்கூடாது என்பதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் அனைத்து எம்எல்ஏக்களையும் அந்தக் கும்பல் சிறை வைத்துள்ளது. அவர்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அடியாட்களை இறக்கி பாதுகாத்து வருகிறது. ரிசார்ட் அருகே உள்ள அந்த கும்பல் அப்பகுதி மக்களையே அங்கு செல்லவிடாமல் பிரச்சனை செய்து வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கூவத்தூர் பகுதி மக்கள் அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தினர். இதற்கு உடன்படாத அவர்கள் கிராம மக்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அறப்போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அறப்போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எனப்படும் பங்களாவில் வசித்து வந்தார். அவர் திரை உலகில் புகழ் பெற்றிருந்த போது அந்த பங்களாவை தனது தாயார் சந்தியாவுடன் சேர்ந்து கட்டினார். 

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு தற்போது அந்த பங்களாவில் அவரது தோழி சசிகலா வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு சார்பில் எந்தவித அதிகாரப் பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் சசிகலா விற்கு எதிராக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் செய்து வரும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த அதிரடியாக போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு இது தொடர்பாக அவர் தனது கருத்தையும், விருப்பத்தையும் வெளியிட்டார். 

அப்போது அவர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் மறைந்த முதல்-அமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு அவர்கள் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அது போல ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும்’’ என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறுகையில், ‘‘போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்பட வேண்டும். மேலும் அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கி அங்கு வைக்க வேண்டும். 

இந்த நினைவு இல்லத்தை தினமும் பொது மக்கள் வந்து பார்வையிட்டு செல்வதற்கேற்ப வசதிகள் செய்ய வேண்டும். இதன் மூலம் ஜெயலலிதா பற்றியும், அவரது வாழ்க்கையின் சிறப்பையும் பொது மக்கள் அறிந்து கொள்ள முடியும்’’ என்று கூறியுள்ளார். 

ஜெயலலிதா வீடு அரசுடைமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். அந்த அரசாணையை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிறப்பித்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. 

இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியானது. ஆனால் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவதற்கான உத்தரவில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டாரா? என்பதை தலைமை செயலக வட்டாரங்களால் உறுதி செய்ய இயலவில்லை. 

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு தெரிவித்த மதுசூதனனுக்கு நன்றி தெரிவித்தார். தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவரையும் கைகூப்பி வரவேற்பதாக ஓ.பி.எஸ். கூறினார். கழகத்தின் நிரந்தர அவைத்தலைவர் மதுசூதனன் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.

பேசும் போது போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் வரை அறப்போராட்டம் தொடரும்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ளார்கள்.சசிகலா தரப்பு தங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயார் என கூறினார்.

மும்பையில் இருந்து ஆளுநர் சென்னை புறப்பட்டார்: விமான நிலையத்தில் வரவேற்க ஓ.பி.எஸ். திட்டம்

மும்பை இல்லத்தில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை புறப்பட்டார். விமானத்தில் வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சென்னை வரும் ஆளுநரை விமான நிலையத்தில் வரவேற்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆளுநரை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை சென்னை வரும் ஆளுநரை அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணி அளவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர சசிகலா திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, 7 February 2017

மதுசூதனனைதான் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்வதாக இருந்தது: ஓ.பி.எஸ்

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி, அம்மா நினைவிடத்திற்கு வந்து, அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன். என் மனசாட்சி உந்தப்பட்டதால் இங்கு வந்து சேர்ந்தேன். அம்மாவின் ஆன்மா என்னை உந்துபடுத்தியது. எனவே உங்களிடம் நான் நின்று கொண்டுள்ளேன். புரட்சி தலைவி அம்மா அவர்கள், நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருடைய உடல்நிலை, 70 தினங்கள் கழித்த பிறகு மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
கட்சியும், ஆட்சியும், காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்ற நிலையில், என்னை வந்து சந்தித்து கேட்டபோது, மாண்புமிகு அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாற்று ஏற்பாடு என்ன தேவை என்று கேள்வி எழுப்பினேன். அசாதாரண சூழ்நிலை எழுந்தால் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நான் கேட்டு, அரை மணி நேரம், அம்மா நிலையை கண்டு அழுது புலம்பினேன். என்ன சொல்ல வருகிறீர்கள் என மீண்டும் கேட்டபோது, அம்மா இறந்துவிட்டால், கழக பொதுச்செயலாளர் முதல்வர் ஆகிய பொறுப்பை ஏற்று நடக்க உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். என்ன சொல்கிறீர்கள் என கேட்டேன். கழக பொதுச்செயலாளராக கழக அவைத்தலைவர் மதுசூதனன் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதல்வராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். நான் அதை மறுத்தேன். வற்புறுத்தலுக்கு பிறகே ஏற்றேன். ஜெயலலிதா இறந்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து திவாகர் சார் உங்களை முதல்வர் பதவியை விட்டுத்தர சொன்னார் என்று கூறினார். இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
சசி முன்பு சங்கு ஊதிய 10 பேர் கைது
 ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்கு சென்று, சசிகலா முன்பு சங்கு ஊதிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

நேற்று நள்ளிரவு சென்னை போரூரை சேர்ந்த 10 அ.தி.மு.க தொண்டர்கள் சசிகலா வின் புகழ் பாடியபடி போயஸ் தோட்டம் அருகே வந்தனர். போலீசாரும் சசியின் புகழ் தானே என்று தானே நினைத்து, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று பாட அனுப்பி வைத்தனர்.வீட்டு வாசல் வந்ததும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து ஊத தொடங்கினர் . இதனால் அதிர்ச்சியில் போலீஸ் திகைத்தனர். சசிகலா அதை பால்கனியில் நின்று அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார். 10 பேரும் தற்போது ராயபேட்டை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சசிக்கு எதிராக 1.5 லட்சம் பேர் கையெழுத்து
சசிகலாவுக்கு எதிராக change.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 5ம் தேதி முதல் இந்த கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்து தளம் துவங்கப்பட்ட, 15 நிமிடத்திற்குள் 10,000 பேர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்துள்ளனர். தற்போது வரை 1,55,447 கையெழுத்துகள் போடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்த கையெழுத்துக்களை ஜனாதிபதி, தமிழக கவர்னர் மற்றும் தலைமை தேர்தல் கமிஷன் ஆகியோருக்கு அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்கா பிப்ரவரி 10ம் தேதி திறக்கப்படும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

ஜெ. நினைவிடத்தில் 25 நிமிடங்களுக்கும் மேலாக அமர்ந்து முதல்வர் ஓ.பி.எஸ். தியானம்


சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்மூடி தியானம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவும் சூழலில் இரவில் ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம் செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். திடீர் தியானத்தில் உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் 25 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து கண்களைமூடி முதல்வர் ஓ.பி.எஸ். தியானம் மேற்கொண்டார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிச.5-ம் தேதி நள்ளிரவில் முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்றார்.  

Monday, 6 February 2017

டெல்லியில் சுற்றுச்சூழல் மாசால் தினமும் 8 பேர் பலி: உச்சநீதிமன்றம் தகவல்

டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தினமும் 8 பேர் உயிரிழப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு நீதிபதிகள் லோகூர், எம்.சி. பான்ட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த 2010-ல் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி டெல்லியில் சுற்றுச்சூழல் தொடர்பான நோய் காரணமாக, தினமும் சராசரியாக 8 பேரும், வருடந்தோறும் 3000 பேரும் உயிரிழப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

அதேபோல் 2013-ல் எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வு அறிக்கையின்படி மாசு காரணமாக நுரையீரல் தொடர்பான நோய் காரணமாக டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் 66 சதவீதம், மாயாபுரி பகுதியில் 59 சதவீதம், சரோஜினி நகர் பகுதியில் 46 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் அதிக சல்பர் பயன்பாடு ஆகியவற்றை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழக மூத்த அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா?

முதல்வர் பதவியை சசிகலா ஏற்பதில் சிக்கல் நீடிப்பது ஒரு புறம் இருக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வது தொடர்கிறது. அந்த வகையில், தனி அதிகாரியாக செயல்பட்டு வந்த சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்து விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளராக இருந்த வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விலகி விட்டனர். மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் பதவியில் இருந்த சாந்தா ஷீலா நாயரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதத்துடன் முடிந்தது. அப்போது அவரை அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கவனிக்கும் தனி அதிகாரியாக ஜெயலலிதா நியமித்தார். அந்த பதவியில் இருந்து தான் தற்போது சாந்தா ஷீலா நாயர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதவிர அரசு ஊழியர் பென்ஷன் பிரச்னையை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவிலும் சாந்தா ஷீலா நாயர் இடம் பெற்று இருந்தார். அந்த பொறுப்பு முடிவுக்கு வந்து, 40 நாட்களுக்கு மேலாகி விட்டது. அதை நீடிக்கும் கோப்பு முதல்வர் அலுவலகத்துக்கு சென்றுள்ளது. அதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது.
பதவியேற்கும் முன் டுவிட்டரில் தானே முதல்வரான சசிகலா
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஓரிரு நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சசிகலாவின் டுவிட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த தமிழக அமைச்சர்களுக்கு நன்றி என சசிகலா கருத்து பதிவிட்டுள்ளார். இந்த பக்கத்தில், சசிகலாவின் படத்திற்கு கீழ், தமிழக முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது. . 
இந்த பக்கம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள பஞ்சாப் அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சாத்வி கோஷ்லா, தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக முதல்வராக அதிகாரப்பூர்வமாக கவர்னர் மூலம் பதவியேற்பதற்கு முன்னரே டுவிட்டரில் பதயேற்பு நடந்துள்ளது. தமிழகத்தின் இப்போதைய நிலையை கண்டு சொர்க்கத்தில் அம்மா அழுவார் என குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா பதவியேற்பு விழா ஒத்திவைப்பு
: சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டது.

அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வாகி உள்ள சசிகலா நாளை (செவ்வாய் கிழமை) தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னை பல்கலை.,யில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சசிகலா முதல்வராக பதவி ஏற்றால் தமிழகத்தில் ஸ்திரமான ஆட்சி நீடிக்குமா என கவர்னர் வித்யாசாகர் ராவ் டில்லியில் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

ஜெயலலிதா சாவில் மர்மம் இல்லை; உள் உறுப்புகள் செயலிழந்தது: மருத்துவர் ரிச்சர்டு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்சிஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த பாதிப்பால் இருதயம் பாதிக்கபட்டு, சிறுநீர் தொற்றுபாதிப்பும் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது'' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் கூறினர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர்கள் கூட்டாக கூறியதாவது:
மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்க கடமைபட்டுள்ளோம். என்னிடம் (ரிச்சர்டு ஹசான் பீலே) எந்த தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இல்லை. உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வந்துள்ளேன். ஜெயலலிதா மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

செப்சிஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த பாதிப்பால் இருதயம் பாதிக்கப்பட்டது. சிறுநீர் தொற்றும் இருந்தது. சர்க்கரை நோய் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக இருந்ததாலும், ரத்தக் கொதிப்பும் இருந்ததால் இந்த நோய் எளிதில் பரவும் வாய்ப்பு இருந்தது. நோய் தொற்று இருதயம் வரை பரவியதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ரத்தத்தில் பாக்டீரியா கலந்து இருந்தது. உலகில் உள்ள அனைத்து சிறந்த மருத்துவமும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு கால்கள் எடுக்கப்படவில்லை. அவர் கால்களுடன்தான் இருந்தார். புகைப்படம் அவசியமில்லை.

காய்ச்சல் என்று வந்தவருக்கு தொடர்ந்து பல்வேறு தொந்திரவுகள் ஏற்பட்டது. நீர்ச்சத்து குறைபாடும் இருந்தது.

தேர்தலின்போது அவர் கைரேகை வைத்தார். கையில் வீக்கம் இருந்ததால், கைரேகை வைத்தார். அதற்கு சாட்சி மருத்துவர் பாலாஜிதான். அவருக்கு கையில் குளுகோஸ் சென்று கொண்டு இருந்ததால் அவரால் கையெழுத்து போட முடியவில்லை. தேர்தல் ஆவணத்தில் என்ன இருந்தது என்பதை படித்தும் பார்த்தார். ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார். சிகிச்சைக்கு வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார்.

கைரேகை பெறும்போது ஜெயலலிதா பேசினார் (மருத்துவர் பாலாஜி கூறியது). ட்ரைக்யோஸ்டமி சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு சுயநினைவு திரும்பியது. மீண்டும் சைகை மூலம் பேசி வந்தார். உடல்நிலை தேறி வரும்போதுதான் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபட்டது.

சிசிடிவி கேமராக்கள் இல்லை...

மருத்துவமனைக்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லை. ஜெயலலிதாவை எப்படியும் பிழைக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் போராடினோம். ஜெயலிதாவுக்கு அருகில் இருந்தவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. அரசியல் அழுத்தத்தால் அவருக்கு அளித்த சிகிச்சை அப்போது வெளியிடவில்லை. இரண்டு மாதங்களாகியும் சந்தேகம் தீரவில்லை என்பதால் தற்போது பதில் அளிக்கும் நிலையில் இருக்கிறோம். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

புகைப்படம் அவசியமில்லை...

ஜெயலலிதாவின் மருத்துவமனை புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை.

சசிகலாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டது...

யாரை சந்திப்பது என்பது குறித்து ஜெயலலிதாவே முடிவு செய்தார். அவர் இட்லி போன்ற உணவுகளை சாப்பிட்டார். கண்ணாடி கதவு வழியாக ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் பார்த்தார். சிகிச்சை பற்றி தினமும் சசிகலாவிடம் விளக்கினோம். தொலைக்காட்சி பார்த்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நாளை வீட்டுக்கு செல்லலாம் என்பதை பேப்பரில் எழுதி ஜெயலலிதாவுக்கு காட்டினோம் (ரிச்சர்டு). என்னுடைய குழந்தைகள் பற்றியெல்லாம் அவரிடம் பேசினேன்.

மாரடைப்பு ஏற்பட்டபோது மருத்துவர்கள் அவருடன்தான் இருந்தனர். மாரடைப்பால்தான் அவரது உடல் முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

கவர்னரை ஜெயலலிதா பார்த்தார்...

கண்ணாடி கதவு வழியாக கவர்னர் பார்த்தபோது அவரை ஜெயலலிதாவும் பார்த்தார். ஜெயலலிதாவை லண்டன் அழைத்து செல்ல ஆலோசித்து வந்தோம். சிகிச்சை பெற்றது மிகப்பெரிய தலைவர் என்பதால் சிகிச்சை முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 5ஆம் தேதிதான் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை.

ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து வந்தார். ஜெயலலிதாவிடம் நான் நேரடியாக பேசி வந்தேன். பிசியோதெரபி முடிந்த பின்னர் மூச்சு விடுவதற்கு ஜெயலலிதா சிரமப்பட்டு வந்தார்.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள், வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கி நடைமுறைகள் தற்போது செல்போன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செல்போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம். இதனால் செல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி. படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப்ரீபெய்டு மொபைல் போன்கள் விஷயத்தில் கட்டாயம், அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட வேண்டும். கிரிமினல், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்த நம்பர்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கவே கண்டிப்பான இந்த உத்தரவு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகார், படிப்படியாக இதை நடைமுறைப்படுத்தலாம். ரீசார்ஜ் வசதியை அவர்களுக்கு வழங்காமல் 6 மாத காலத்தில் அவர்கள் பற்றிய முழு விவரத்தையும் தீர விசாரித்தறியலாம் என்று கூறினார்.

சிம் கார்டு பெறுபவர்கள் யார் எங்கிருப்பவர்கள் என்ற விவரங்கள் எதுவும் முறைப்படி விசாரணை இல்லாம் நாட்டில் சுமார் 5 கோடி ப்ரீபெய்டு சந்தாராரர்கள் இருக்கிறார்கள் என்று லோக் நிதி பவுண்டேஷன் என்னும் அமைப்பு தொடர்ந்த ஒரு பொது நல வழக்கையடுத்து உச்சநீதிமன்ற அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Sunday, 5 February 2017

சசிகலா கணவர் நடராஜனுக்கு ஹை பிபி.. அப்பல்லோவில் அனுமதி.

நேற்று தான் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே அவரது கணவர் நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். அவருக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதன் எதிரொலி: உள்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

    
தமிழக முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சரை இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக ஆளுநர் பதிவியை கூடுதலாக கவனிக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக உதகை சென்றிருந்தார். நாளை வரை அங்கு தங்கியிருக்க திட்டமிட்டிருந்த ராவ், நேற்று மாலையே பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார். 

மத்திய அரசின் அழைப்பின் பேரிழையே புறப்பட்டு சென்றதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தெரிகிறது. இதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை வருவார் என கூறப்பட்ட நிலையில், திடீரென டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
பண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அதே தொகை அபராதம்
ஏப்ரல் 1–ந் தேதி முதல் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
கருப்பு பணப்புழக்கத்தை தடுக்கும் நோக்கில் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொண்ட மத்திய அரசு, ரொக்கபண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது.
இந்த ரொக்க பரிமாற்றத்துக்கான கட்டுப்பாடு குறித்து மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா, பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அதே அளவு அபராதம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏராளமான கருப்பு பணம் தற்போது வங்கி கணக்கில் வந்துள்ளது. இனிமேல் எதிர்கால தலைமுறை மூலம் எந்தவகையிலும் கருப்பு பணம் சேராமல் இருக்க மத்திய அரசு விரும்புகிறது. எனவே அனைத்து விதமான பெரிய தொகை கொண்ட பரிமாற்றங்களையும் கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பெரிய தொகையிலான ரொக்கபண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 1–ந் தேதி முதல் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும். எடுத்துக்காட்டாக ரூ.4 லட்சம் பரிமாற்றம் என்றால் ரூ.4 லட்சமும், ரூ.50 லட்சம் பரிமாற்றம் என்றால் ரூ.50 லட்சமும் அபராதம் வசூலிக்கப்படும்.
பணத்தை வாங்குவோருக்கு அபராதம்
இத்தகைய பரிமாற்றங்களில் பணத்தை வாங்குவோருக்கே இந்த அபராதம் விதிக்கப்படும். ஒருவர் ரூ.3 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட கைக்கடிகாரம் ஒன்றை வாங்கினால், அந்த பணத்தை வங்கும் கடை உரிமையாளருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும்.
எனினும் வங்கிகள், தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கி போன்ற அரசு நிறுவனங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது.
மக்கள் அதிகமான கருப்பு பணத்தை கார், கைக்கடிகாரம், நகைகள் போன்ற ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் செலவழித்து வருகின்றனர். இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் மேற்கண்ட செலவினங்கள் கட்டுப்படுவதுடன், கருப்பு பணம் பதுக்குதலும் தடுக்கப்படும்.
இவ்வாறு ஹஸ்முக் அதியா கூறினார்.