Monday, 6 February 2017

தமிழக மூத்த அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா?

முதல்வர் பதவியை சசிகலா ஏற்பதில் சிக்கல் நீடிப்பது ஒரு புறம் இருக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வது தொடர்கிறது. அந்த வகையில், தனி அதிகாரியாக செயல்பட்டு வந்த சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்து விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளராக இருந்த வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விலகி விட்டனர். மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் பதவியில் இருந்த சாந்தா ஷீலா நாயரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதத்துடன் முடிந்தது. அப்போது அவரை அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கவனிக்கும் தனி அதிகாரியாக ஜெயலலிதா நியமித்தார். அந்த பதவியில் இருந்து தான் தற்போது சாந்தா ஷீலா நாயர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதவிர அரசு ஊழியர் பென்ஷன் பிரச்னையை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவிலும் சாந்தா ஷீலா நாயர் இடம் பெற்று இருந்தார். அந்த பொறுப்பு முடிவுக்கு வந்து, 40 நாட்களுக்கு மேலாகி விட்டது. அதை நீடிக்கும் கோப்பு முதல்வர் அலுவலகத்துக்கு சென்றுள்ளது. அதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment