சென்னை: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலாவின் பெயரை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார்.
சென்னையில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர்
ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வராக சசிகலா வரும் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார். சசிகலாவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். சசிகலாவை புதிய முதல்வராக தேர்வு செய்தது பற்றி ஆளுநரிடம் அதிமுக கடிதம் வழங்க உள்ளனர்.
No comments:
Post a Comment