கமுதி ஒன்றிய பகுதியில் கழிப்பறை கட்டியதில் பல லட்சம் முறைகேடு
கமுதி பகுதியில் கழிப்பறை தரமற்றதாக கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகளில் 7,280 தனி நபர் கழிப்பறைகள் சுகாதார பாரத இயக்கம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. தற்போது பசும்பொன், புதுக்கோட்டை, பம்மனேந்தல், வலையபூக்குளம், மேலமுடிமன்னார் கோட்டை, கே.நெடுங்குளம், நாராயணபுரம், பாக்குவெட்டி உள்ளிட்ட 53 கிராம ஊராட்சிகளில் தனி நபர் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் சில இடங்களில் தரமற்ற முறையில் கழிப்பறை கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக பல்வேறு இடங்களில் ஆட்களே இல்லாத வெளியூர்களில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களின் வீடுகளை கண்டறிந்து கட்டப்பட்டுள்ளது. இதற்காக அவர்களிடம் முறையாக அனுமதி பெறாமல், வீட்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வீடுகளில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் சொந்த செலவில் கழிபறைகளை கட்டி பயன்படுத்தி வருகின்றனர். அந்த கழிப்பறையையும் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக புகைப்படம் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சிறுக்குளம் பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எங்களின் அனுமதியை பெறாமல் வீடுகளுக்கு முன்பாக கழிப்பறைகள் கட்டி முடித்துள்ளனர். அதனை பெயரளவிற்கு தரமற்றதாக கட்டி முடித்ததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதேபோன்று 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெளியூர்களுக்கு குடிபெயர்ந்துள்ள நபர்களின் வீடுகளை கண்டறிந்து, கழிப்பறைகள் கட்டியுள்ளனர். இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உடன் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன், தரமாக தனிநபர் கட்டிடம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற கட்டிடம் கட்டப்பட்டது குறித்த புகார் ஏதும் வந்தாலோ, அல்லது எங்களது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், கான்டிராக்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அதுபோல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:
Post a Comment