டெல்லியில் சுற்றுச்சூழல் மாசால் தினமும் 8 பேர் பலி: உச்சநீதிமன்றம் தகவல்
டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தினமும் 8 பேர் உயிரிழப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு நீதிபதிகள் லோகூர், எம்.சி. பான்ட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த 2010-ல் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி டெல்லியில் சுற்றுச்சூழல் தொடர்பான நோய் காரணமாக, தினமும் சராசரியாக 8 பேரும், வருடந்தோறும் 3000 பேரும் உயிரிழப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 2013-ல் எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வு அறிக்கையின்படி மாசு காரணமாக நுரையீரல் தொடர்பான நோய் காரணமாக டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் 66 சதவீதம், மாயாபுரி பகுதியில் 59 சதவீதம், சரோஜினி நகர் பகுதியில் 46 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் அதிக சல்பர் பயன்பாடு ஆகியவற்றை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment